பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள்: 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
UPDATED : மார் 25, 2024 05:25 PM
ADDED : மார் 25, 2024 10:37 AM

சென்னை: பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என 10ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனது அருமை மாணவச் செல்வங்களே. ஆல் தி பெஸ்ட். நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

