உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 12, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில், பொது மக்கள் தகவல் பெறுவதற்காக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வீடு, மனை விற்பனையில் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஆணையம், 2017ல் ஏற்படுத்தப்பட்டது. புதிதாக வீடு, மனை வாங்குவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து, இங்கு புகார் செய்யலாம்; இந்த புகார்கள் வழக்காக பதிவு செய்து விசாரிக்கப்படும்.
மேலும், புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அதை இங்கு பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான தகவல்களை, பொது மக்கள், கட்டுமான நிறுவனங்கள் அறிய, தனி உதவி மையம், ரியல் எஸ்டேட் ஆணைய அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த மையத்தை, 90252 01202 என்ற மொபைல் போன் எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். அலுவலக நாட்களில் காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
