சாலையோரம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்; மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு
சாலையோரம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள்; மர்ம நபர்கள் வீசிவிட்டு சென்றதால் பரபரப்பு
ADDED : செப் 27, 2026 11:04 PM

நமது நிருபர்
உளுந்துார்பேட்டை அருகே சாலையோரம் 500 ரூபாய் நோட்டுகளை மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மாவிடந்தல் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக வீசப்பட்டு கிடந்தது. மர்ம நபர்கள் யோரா வாகனத்தில் சென்றவர்கள் வீசியபடியே சென்றுள்ளனர்.
சாலையோரம் ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்த வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். அந்த நோட்டுகளை பரிசோதித்ததில், அவைகள் உண்மையான ரூபாய் நோட்டுகள் இல்லை, கலர் பிரிண்டிங் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என தெரியவந்தது.
அதையடுத்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கள்ளநோட்டுகளை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
