ADDED : அக் 29, 2025 04:38 AM

அண்ணா பல்கலை பிரச்னையிலிருந்து, 'சார்' என்றாலே தி.மு.க.,வுக்கு அலர்ஜி ஏற்பட்டிருந்தது. தற்போது, தேர்தல் தோல்வி குறித்து அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக காங்., பிரதமர்கள் காலங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, இறந்தவர்களை நீக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
பீஹார் மாநிலத்தில் நடந்த வாக்காளர் சிறப்பு திருத்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில், 30 லட்சம் பேர் ஊரிலேயே இல்லை. 28 லட்சம் பேர் இறந்தே போயினர். இதெல்லாம் திருத்தப் பட்டியல் பணி மேற்கொண்டதால் தான் தெரிய வந்தது.
சென்னை கொளத்துார் சட்டசபைத் தொகுதியில் மட்டும், இருக்க வேண்டிய ஓட்டு எண்ணிக்கையை காட்டிலும், ஒன்பதாயிரம் ஓட்டுகள் கூடுதலாக உள்ளன. அதெல்லாம் போலியாக தி.மு.க.,வினரால் சேர்க்கப்பட்டவை.
- நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,

