ADDED : அக் 13, 2025 01:13 AM
தமிழகத்தில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், சம்பிரதாயமாகவே நடந்தன. ஆனால், விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின், கிராமப்புற மாணவ, மாணவியரும் மாநில அளவில் பங்கேற்கும் வகையில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. ஜாதி பெயர் வைக்கும் விவகாரத்தில், பொய் கு ற்றச்சாட்டுகளை சொல்வது, எதிர்கட்சிகளின் வாடிக்கை. புகழ் பெற்ற ஒரு சிலரை ஜாதி பெயரை சொன்னால் தான் மக்களுக்கு தெரியும். ஒரு சில அறிஞர்கள், சான்றோர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் பெயரை கூறும்போது, நீண்ட காலமாக ஜாதி அடையாளம் இருந்தது.
புதிதாக 34 கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல், 2,700 நிரந்தர பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இல்லை என்ற நிலையை எட்டவும், உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது
- செழியன்
தமிழக அமைச்சர், தி.மு.க.,