ADDED : மார் 12, 2024 02:34 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளையை சேர்ந்தவர் நேசமணி. இவருக்கும் அவரது உறவினர் ஞானசிகாமணிக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. 2005 ஆகஸ்ட் 28-ல் நேசமணியின் மகன் முத்துராஜ் 34, உறவினர் ஞான சிகாமணியை தாக்கியுள்ளார். இதையடுத்து ஞானசிகாமணியின் மகன்கள் செல்வன் 33, செல்வ சிங் 32, ஆகியோர் நண்பர்கள் வாழையத்து வயலைச் சேர்ந்த சுரேஷ் 32, அழகியபாண்டிபுரத்தைச் சேர்ந்த ரசீத் 23, துரை 28, ஆகியோருடன் சேர்ந்து முத்துராஜை கொலை செய்தனர். பூதப்பாண்டி போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் செல்வன், செல்வசிங், சுரேஷ், ரஷீத், துரை ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மூன்று பேரை விடுவித்தும் நாகர்கோவில் மாவட்ட உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார்.
வழக்கில் தொடர்புடைய சந்தானம் விசாரணைக்காலத்தில் உயிரிழந்துவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
