ADDED : ஆக 21, 2024 02:46 AM

சென்னை:நாகப்பட்டினம் ஜெயலலிதா மீன்வள பல்கலை வளாகத்தில், 12.8 கோடி ரூபாயில் கட்டப்பட்ட உழவர் பயிற்சி மையத்தை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை மாதவரத்தில் கால்நடை தொற்றுநோய் தடுப்பூசி ஆய்வகம், நாட்டுக்கோழி வளர்ப்பு கூண்டு கொட்டகை, ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லுாரியில் விலங்கின ஆய்வு கூடம்.
தேனி வீரபாண்டி கால்நடை மருத்துவ கல்லுாரியில் கால்நடை பண்ணை வளாகம், தீவன உற்பத்தி மையம் உள்ளிட்ட, 33.1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
1 ராமேஸ்வரத்தில் புனரமைக்கப்பட்ட படகு ஜெட்டி, மயிலாடுதுறை சந்திரபாடி மீன் இறங்குதளம், கடலுார் மாவட்டம் சுனாமி நகர், அக்கரைகோரி கிராமங்களில் மீன் இறங்குதளம் உள்பட, 112 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மற்றும் கட்டப்பட்ட மீன் இறங்கு தளங்கள், மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளும் திறந்து வைக்கப்பட்டன.
2மீன்வளத் துறை - 35 உதவியாளர்கள், அறநிலையத் துறை - 172 உதவியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை - 523 உதவியாளர்கள், 946 மருந்தாளுனர்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு ஐந்து தொழில் வழிகாட்டி ஆலோசகர்களுக்கான பணி நியமன உத்தரவுகளையும் முதல்வர் வழங்கினார்.
இதில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.