sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை

/

 கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை

 கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை

 கோடை சாகுபடியை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை


ADDED : பிப் 26, 2026 02:29 AM

Google News

ADDED : பிப் 26, 2026 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 12 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்தது. இதன் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது.

இதேபோல, திருவள்ளூர், திருவண்ணாமலை, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள் ளிட்ட மாவட்டங்களிலும், நெல் மட்டுமின்றி பலவகை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை முடிந்துள்ளது.

சாகுபடி முடித்த விவசாயிகள், அடுத்த போக நெல் சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். பல அணைகள் மற்றும் ஏரிகளில் வேகமாக நீர் வறண்டு வருகிறது. அதை நம்பி சாகுபடி செய்தால், பாசனத்திற்கு சிக்கல் ஏற்படும்.

எனவே, நெல்லுக்கு மாற்றாக சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

'தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளதால், ஏப்ரல் மாதத்தில், பயிர் சாகுபடியை துவங்க வேண்டாம். நிலத்தடி நீராதாரங்களின் இருப்பை பொறுத்து, சாகுபடி மேற்கொள்ளுங்கள்' என, சில மாவட்ட விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us