sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்

/

வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்

வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்

வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்


ADDED : அக் 05, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 05, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெங்காய உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக உள்ள இந்தியா, ஆண்டுதோறும் 3.5 கோடி மெட்ரிக் டன் உற்பத்தி செய்கிறது.

உற்பத்தியாகும் வெங்காயம், 70-80 சதவீதம் கிடங்குகளில் சேமிக்கப்படுகின்றன. அடுத்த அறுவடையை 8--10 மாதங்களுக்குப் பிறகுதான் மேற்கொள்ள இயலும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தொடர் வினியோகத்தை உறுதி செய்ய இந்த சேமிப்பு முக்கியமானது. இருப்பினும், சேமிப்பின் போது 40--50 சதவீதம் வீணாகிறது. இது விலைகளில் பெரிய ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கிறது,

மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள 'கோடாம் இன்னோவேஷன்ஸ்' என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், வெங்காய சேமிப்பு காலத்தை மேம்படுத்துகிறது.

இதை துவங்கியவர், கல்யாணி ஷிண்டே; ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தைக்கு பெயர் பெற்ற லாசல்கான் என்ற ஊரைச் சேர்ந்தவர்.

இவர் பொறியியல் பட்டம் படிக்கும் போது, வெங்காயச் சந்தையில் ஏற்படும் சிக்கலைக் கண்டார். அது அவரது குடும்பத்தை மட்டுமின்றி எண்ணற்ற பிற விவசாயிகளையும் பாதித்ததை அறிந்தார். வெங்காய உற்பத்தியில் உள்ள அதிகரித்து வரும் செலவுகள், வீணாதல், நேரம் மற்றும் முயற்சி குறித்து அவரது குடும்பத்தினர் அடிக்கடி விவாதிப்பதை கேட்க நேர்ந்தது. அதன் விளைவு தான் 'கோடம் இன்னோவேஷன்ஸ்' உருவானதற்குக் காரணம்.

சாதனம் உருவானது இந்நிறுவனம் 'இன்டர்நெட் ஆட் திங்ஸ்' (ஐ.ஓ.டி.,) அடிப்படையில் சாதனத்தை உருவாக்கியது, இது வெங்காய சேமிப்பகத்தில் நிகழ்நேர நுண்ணிய காலநிலை நிலைமைகளைக் கண்காணிக்கிறது; வயலிலும், சேமிப்பின் போதும் துர்நாற்றத்தைக் கண்டறியும்.

ஒரு கிடங்கில் 10 மெட்ரிக் டன்களுக்கு ஒரு சாதனம் பாதுகாப்பு அளிக்க முடியும். கண்டறிதலின் அடிப்படையில், விவசாயிகளை இந்த நிறுவனம் எச்சரிக்கை செய்கிறது. அவர்கள் தங்கள் விளைபொருட்களை ஒரு மாதத்திற்கு மறு தரம் பிரித்து, ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்; வீணாவதை குறைக்க உடனடியாக சந்தையில் விற்கலாம். விவசாயிகளை எச்சரிக்க, மொபைல்போனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். பயிர்களின் தற்போதைய நிலை குறித்து வாரத்திற்கு இருமுறை எச்சரிக்கைகளையும் அனுப்புகின்றனர். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் இழப்புகளை 40--50 சதவீதத்தில் இருந்து 5--10 சதவீதமாக குறைக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது.

நிறுவனத்தின் சேவைகள் ஐ.ஓ.டி., அடிப்படையிலான தீர்வு, தொலைநிலை கண்காணிப்பு, அறுவடைக்குப் பிந்தைய வீணாவதை குறைத்தல், உள்ளூர் மொழியில் தகவல், 24 X 7 டேட்டா சேவைகள். ஒவ்வொரு சேமிப்பு பருவத்திலும் கிடங்கின் தொலைநிலை கண்காணிப்பு, கிடங்கு கட்டுமானம் மற்றும் வெங்காயத்திற்கான பயிர் சேமிப்பு முறைகளில் ஆலோசனை, வெங்காய பயிர் கொள்முதல் தொலைநிலை நெட்வொர்க் இணைப்பு, கட்டுப்படுத்தப்பட்ட காலநிலை கட்டமைப்பு மேம்பாடு.

தற்போது, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, உ.பி.,யில் இந்நிறுவனம் செயல்படுகிறது. மேலும் 250க்கும் மேற்பட்ட யூனிட் ஐ.ஓ.டி., சாதனங்களை விற்பனை செய்துள்ளனர். அடுத்த 2-3 ஆண்டுகளில், ஆண்டுதோறும் 1,5-20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். உருளைக்கிழங்கு போன்ற நீண்ட கால பயிர்களைச் சேர்ப்பதிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

இணையதளம்: www.godaaminnovations.com

ஈமெயில் info@godaaminnovations.com

சந்தேகங்களுக்கு: இ-மெயில்: Sethuraman.sathappan@gmail.com அலைபேசி 98204 51259

இணையதளம் www.startupandbusinessnews.com



- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us