sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் டோக்கனும் கையுமாக காத்திருக்கும் விவசாயிகள்

/

32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் டோக்கனும் கையுமாக காத்திருக்கும் விவசாயிகள்

32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் டோக்கனும் கையுமாக காத்திருக்கும் விவசாயிகள்

32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தம் டோக்கனும் கையுமாக காத்திருக்கும் விவசாயிகள்


ADDED : அக் 29, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 32 நாட்களாக நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், 'டோக்கன்' வாங்கிய விவசாயிகள் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டு, 6.50 லட்சம் ஏக்கரிலும், மற்ற மாவட்டங்களில், 13 லட்சம் ஏக்கரிலும் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு இணையாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

கடந்த, 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டு நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கொள்முதல் செய்வதற்கான முறையான ஏற்பாடுகளை, உணவுத்துறை செய்யவில்லை.

கடந்த மாதமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டும், கோணி பைகள், சணல், சுமை துாக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக, நெல் கொள்முதல் முறையாக நடக்கவில்லை.

வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே காத்திருந்த மூட்டைகளில், நெல் மணிகள் முளைக்க துவங்கியுள்ளன. டெல்டா மாவட்டங்களில் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, அங்கு கொள்முதல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஆனால், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் கொள்முதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 32 நாட்களுக்கு மேலாக, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர். கொள்முதல் செய்வதற்கான, 'டோக்கன்' வழங்கிய கொள்முதல் மைய அதிகாரிகள், இன்று, நாளை என தட்டிக்கழித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, காஞ்சி புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:

திருப்போரூர் வட்டாரத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மழையை காரணம் காட்டி கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. மழை ஓய்ந்ததும் கொள்முதல் செய்வதாக அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதேபோல மாவட்டம் முழுதும், நெல் கொள்முதலில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் முளைக்க துவங்கியுள்ளன. இந்நிலையில், வரும் 31ம் தேதியுடன் சில கொள்முதல் நிலையங்கள் மூடப்பட உள்ளதாகவும் தகவல் வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us