ADDED : ஜூலை 21, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மரபணு மாற்ற நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு, நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, டில்லியில் நாளை மறுதினம், விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
நாடு முழுதும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி சாகுபடி ஏற்கனவே நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, நெல் ரகங்களை அறிமுகம் செய்ய, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, நாளை மறுதினம், டில்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இதில், தமிழக விவசாய பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.