உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 07:30 PM
ADDED : அக் 14, 2026 07:18 PM
அ நிறம் | அளவு
சென்னை: கூட்டுறவு விவசாய கடன் முழுதையும், தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, சென்னையில் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சிவானந்தா சாலையில், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் பங்கேற்றனர். ‘கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்ற அனைத்து வகை கடன்களையும், பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலையும், கூட்டுறவு தேர்தலையும், உடனடியாக நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு என தேர்தல் கமிஷன் வாயிலாக, தனி தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர்.
