தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பிராமணர்களுக்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம்: அர்ஜுன் சம்பத்

பிராமணர்களுக்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம்: அர்ஜுன் சம்பத்

பிராமணர்களுக்கு நீதி கிடைக்க உண்ணாவிரதம்: அர்ஜுன் சம்பத்


ADDED : டிச 09, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி : ''நாத்திகத்திலும் போலி, ஆத்திகத்திலும் போலி என்பது தான் திராவிட மாடல்,'' என, அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் சனாதன ஆதரவு வக்கீல்களின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில், ஹிந்து முன்னணி தலைவர் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி மற்றும் மூத்த வக்கீல்கள் பலர் பங்கேற்றனர்.

அதில் பங்கேற்ற அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி: பிராமண சமூகத்தை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும். பிராமண சமூகம் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த மாதம் பிராமணர்களுடன் இணைந்து, கோரிக்கை ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார் என்பதற்காகவே, நடிகை கஸ்துாரி கூறிய கருத்தை வைத்து, அவரை கைது செய்து துன்புறுத்தினர்.

பிராமணர்களுக்கு ஆதரவாக, சனாதனத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் இப்படி துன்புறுத்தப்படுகின்றனர்.

ஆனால், இசைவாணி என்ற பாடகி, அய்யப்ப பக்தர்கள் மனம் புண்படும்படி பாடல் பாடி வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை இல்லை. அதற்கு பதிலடியாக பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதனால், நீதி வேண்டும் என்பதற்காக, சட்டப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடும் வகையில், சனாதன தர்ம ஆதரவு வக்கீல்களை ஒன்று திரட்டி இருக்கிறோம்.

வரும் ஜனவரி 5ம் தேதி, மதுரையில் பிராமண சமூகம், சனாதன ஆதரவாளர்கள் இணைந்து அடையாள உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

ஆன்மிகத்தை ஏற்றுக் கொண்ட அண்ணாதுரையின் கொள்கைகளை துாக்கிப் பிடிக்காமல், திராவிட மாடல் என்ற போர்வையில் ஆங்கில ஆதரவு, இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு, மோசடி மதம் மாற்ற கும்பல் போன்றவற்றின் ஆதரவு நிலைப்பாட்டில் தி.மு.க., செல்கிறது.

தமிழகத்துக்குள் ஹிந்துத்துவா வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலான செயல்பாடே தி.மு.க, அரசை தோற்க வைத்து விட்டது.

தேச, ஹிந்து, தேசிய விரோதங்களுக்கு 2026ல் நல் விடை கிடைக்கும்.

அம்பேத்கர் நவீன இந்தியாவை வடிவமைத்து, தேசிய மொழியாக, அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்றார்.

ஆனால், இன்று அம்பேத்கரை போற்றுகிறோம் என்று சொல்பவர்கள், அவருடைய கொள்கைகளுக்கு முரணாக செயல்படுகின்றனர்.

வக்பு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அனைத்து மதத்தினருக்கும் நல்லது. ஆனால், அது புரியாமலேயே பலரும் எதிர்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us