நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்ற தந்தை, மகன் கைது
நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்ற தந்தை, மகன் கைது
ADDED : ஆக 04, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குடியாத்தம்: நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்ற தந்தை, மகன் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த காந்தி நகர் கல்லேரியை சேர்ந்த சிலர், நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்துள்ளதாக, டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சோதனை செய்ததில், இரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதை வைத்திருந்த, சின்னப்பன், 34, ஆறுமுகம், 42, ஏழுமலை, 39, ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில், அணைக்கட்டு அடுத்த ஏரியூரில், பவுனு, 70, அவரது மகன் சதாசிவம், 48, மற்றும் மோர்தானாவை சேர்ந்த மனோகரன், 41, துப்பாக்கியை தயாரித்து விற்றது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரு நாட்டு துப்பாக்கிகள், அதை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.