ADDED : பிப் 02, 2026 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., ஆட்சி செய்தபோது, 'தமிழகத்தில் இளம் விதவைகள் அதி கரித்து விட்டனர்' என தி.மு.க., -- எம்.பி-., கனிமொழி பேசினார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் எப்போதுமே இல்லாத அளவுக்கு, சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில், 24 மணி நேரமும் மது, போதைப்பொருட்கள், வெளிநாட்டு போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இவையெல்லாம் தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளன. அதனால், தி.மு.க.,வுக்கு பயமும் கலக்கமும் வந்து விட்டது.
கூட்டணி கட்சிகளை தாங்கி பிடித்து, அவர்கள் தயவில்தான் தேர்தலை சந்திக்கும் நிலையில் தி.மு.க., உள்ளது. கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தி.மு.க.,வால் மக்களை சந்திக்க முடியாது.
எத்தனை கூட்டணிக் கட்சிகளுடன் தி.மு.க., வந்தாலும், வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவர். 'விடியல் பயணம்' என்ற திட்டத்தை தி.மு.க., அரசு கொடுத்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
-- கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

