மாதம் ஒன்று, பயணிகள் 86.65 லட்சம் பேர்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஹேப்பி
மாதம் ஒன்று, பயணிகள் 86.65 லட்சம் பேர்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஹேப்பி
ADDED : மார் 01, 2025 12:58 PM

சென்னை; பிப்ரவரி மாதத்தில் மட்டும் 86.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை;
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 07.02.2025 அன்று 3,56,300 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, பிப்ரவரி மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 14,80,150 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 936 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,046 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,56,385 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 34,22,286 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் மனமார்ந்த நன்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.