பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்
பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார்
ADDED : ஏப் 11, 2025 02:00 AM
திருநெல்வேலி:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இரு பேராசிரியர்கள் மீது பெண் உதவி பேராசிரியர் பாலியல் புகார் அளித்துள்ளார். சமூக நலத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரிடம் இளம்பெண் பிஎச்.டி., பட்டம் பெறுவதற்காக பதிவு செய்தார்.
பின்னர் அதே துறையில் தற்காலிக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பெண் உதவி பேராசிரியர் அங்கு பணியாற்றும் இரு ஆண் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மனரீதியான தொல்லை கொடுப்பதாக புகார் அளித்துள்ளார். மாநில பெண்கள் ஆணையத்திற்கு அவர் அளித்த புகாரை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறையினர் பல்கலையில் விசாரணை மேற்கொண்டனர்.
இருப்பினும் இது குறித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
ஆனால் இவ்வாறு எந்த பாலியல் குற்றச்சாட்டும் நடக்கவில்லை எனவும் அவர் முறையாக வகுப்பு நடத்தாததால் அவர் மீது மாணவர்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவிப்பதாக பல்கலை தரப்பில் தெரிவித்தனர்.