ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து
ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து
ADDED : நவ 21, 2024 01:20 AM

சென்னை:ஆஸ்கர் விருது பெற்ற, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதியர், விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில், 'பேஸ் கிடாரிஸ்ட்டாக' உள்ள மோகினி டே, அவரது கணவர் மார்க்கை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோல்கட்டாவை சேர்ந்த மோகினிடே, 28. உலக அளவில் முக்கியமான கிடார் கலைஞராக உள்ளார்.
இவர் ஜாகிர் உசேன், க்வின்ஸி ஜோன்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்களுடன், இணைந்து பணியாற்றி உள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பில், 'நானும், மார்க்கும், பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். இது பரஸ்பரம் இருவரும் விரும்பி எடுத்த முடிவு. நாங்கள் திருமண உறவிலிருந்து பிரிந்தாலும், தொழில் முறையிலான உறவு நீடிக்கும். நண்பர்களாக இருப்போம். எங்களது இசைப் பயணத்தை இது பாதிக்காது' என, தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கோச்சடையான் படத்தில், மோகினி டே இணைந்து பணியாற்றி உள்ளார்.