ADDED : ஆக 08, 2025 02:36 AM
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வயலுக்கு சென்ற பெண் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த புதுக்குளத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி செல்லம்,55; ராமர், இருமகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். செல்லம் தனியாக வசிக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை அவரது வயலில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் சரக டி.ஜ.ஜி., உமா, மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நேற்று, செல்லம் கொலை குற்றவாளிகளை பிடிக்குமாறு கிராம மக்கள் மற்றும் பா.ம.க., சார்பில், எஸ்.பி., ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் 9 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என, எஸ்.பி., கூறினார்.

