ADDED : செப் 08, 2025 02:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோவை மாவட்டம், அவிநாசி தொகுதியில், வரும் 13ம் தேதி, நான்காம் கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார். இந்நிலையில், பழனிசாமியின், ஐந்தாம் கட்ட பிரசார சுற்றுப்பயண விபரத்தை, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
அதன்படி, வரும் 17ம் தேதி, தர்மபுரி சட்டசபை தொகுதியில், தன் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணத்தை பழனிசாமி துவக்குகிறார். அன்றைய தினம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில், பிரசார கூட்டங்களில் பேசுகிறார்.
இதையடுத்து, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில், சுற்றுப்பயணம் செல்கிறார். வரும் 26ம் தேதி, கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில், தன் ஐந்தாம் கட்ட பிரசார பயணத்தை நிறைவு செய்கிறார்.