மாநில உரிமைக்காக மத்திய அரசுடன் போராடும் நிலை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
மாநில உரிமைக்காக மத்திய அரசுடன் போராடும் நிலை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
ADDED : செப் 24, 2024 10:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: '' மாநில உரிமைக்காக மத்திய அரசுடன் போராட வேண்டிய நிலை உள்ளது,'' என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: காஞ்சிபுரத்தில் வரும் 28 ல் தி.மு.க.,வின் பவளவிழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம். திராவிட மாடல் அரசின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளது. மக்களுக்கான பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடந்து வருகிறது.
போராட்டமே தி.மு.க.,வின் வலிமை. ஆட்சி அதிகாரம் இருந்தாலும் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டு உள்ளோம். மாநில உரிமைகளை மறுக்கும் மத்திய அரசுடன் ஒவ்வொரு உரிமைக்காகவும் போராட வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.