2 நாட்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம்
2 நாட்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம்
ADDED : ஏப் 11, 2024 03:49 PM

சென்னை: தமிழகத்தில் நாளை (ஏப்.,12) முதல் 2 நாட்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரசாரம் செய்ய உள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரசாரம் செய்த நிலையில், நாளை அமித்ஷா மதுரை வருவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நாளை முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், பொள்ளாச்சியில் வசந்தராஜன், சிதம்பரத்தில் கார்த்தியாயினி, தஞ்சாவூர் முருகானந்தம், கிருஷ்ணகிரி நரசிம்மன் ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோ, மக்கள் சந்திப்பு என பிரசாரம் செய்கிறார்.

