உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 06, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
சென்னை: பட்ஜெட்டுடன், சிறிய பேழையில் ஜெப மாலையையும், நிதியமைச்சர் மரிய வில்சன் எடுத்து வந்திருந்தார். பட்ஜெட் உரையை தொடங்கும் முன், கையால் தன் கழுத்தில் அணிந்திருந்த சிலுவையை சரி செய்து கொண்டார். சரியாக காலை 10:00 மணிக்கு பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய அவர், பகல் 12:31 மணிக்கு நிறைவு செய்தார்.
பட்ஜெட் நகலை, நான்கு நாட்களுக்கு முன்பே நிதித்துறையிடம் இருந்து பெற்ற அமைச்சர் மரிய வில்சன், தினமும் இரண்டு மணி நேரம் படித்து பயிற்சி எடுத்துள்ளார். சில, கடினமான தமிழ் வார்த்தைகளை, ஆங்கிலத்திலேயே குறிப்பிட்டார்.
பட்ஜெட் வாசித்து முடித்ததும், முதல்வர் இருக்கை அருகே, அமைச்சர் சென்றார். அதற்குள், முதல்வர் எழுந்து சென்று விட்டார்.
