ADDED : பிப் 03, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கடலில் தவறி விழுந்து மாயமானவர் குடும்பத்துக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கடந்த 14ம் தேதி விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களுடன் படகில் சமையல் பணிக்காக சென்ற, தேங்காய்ப்பட்டணம் கிராமத்தை சேர்ந்த ஜலாலுதீன், 38, கடந்த 21ம் தேதி காலை 5:30 மணிக்கு, கடலில் தவறி விழுந்தார். அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அவரது குடும்பத்துக்கு, முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

