சென்னை விமான நிலையத்தில் பற்றியது தீ; சிறிது நேரம் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் பற்றியது தீ; சிறிது நேரம் பரபரப்பு
ADDED : ஜன 27, 2026 02:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் நுழைவாயிலில் இன்று திடீரென புகை மண்டலம் ஏற்பட்டது. இதையறிந்த விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச புறப்பாடு பகுதியில் உள்ள ஊழியர் உணவகத்தில் தீப்பற்றியதன் காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டது. தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இதனால் எந்த விமானச் செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

