எஸ்.பி.ஐ., வங்கியில் தீ விபத்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
எஸ்.பி.ஐ., வங்கியில் தீ விபத்து கம்ப்யூட்டர், பதிவேடுகள் சேதம்
ADDED : மார் 18, 2024 01:28 AM
துவாக்குடி: திருச்சி மாவட்டம், துவாக்குடி, என்.ஐ.டி.,க்கு அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில், நேற்று காலை, 7.15 மணிக்கு புகை வந்துள்ளது. வங்கி பாதுகாவலர் உள்ளே சென்று பார்த்தபோது, வங்கியின் கம்ப்யூட்டர்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.
உடனே அவர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். திருவெறும்பூர் மற்றும் நவலப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில், வங்கியின் பிரதான அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள், பதிவேடுகள் எரிந்து சேதமாகின. துவாக்குடி போலீசார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரிய வந்துள்ளது.
வங்கி தீப்பிடித்த தகவலறிந்து, வங்கியில் நகைகள் அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள், வங்கி முன் திரண்டனர். நகைகள் பாதுகாப்பாக இருப்பதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்ததால், வாடிக்கையாளர்கள் நிம்மதியுடன் திரும்பினர்.

