ADDED : அக் 23, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை க்கல்லுாரியில் 17ம் தேதி பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை கல்லுாரியை சுத்தம் செய்ய பவித்ரா என்ற ஊழியர் வந்துள்ளார்.
அப்போது வணிகவியல் துறைத்தலைவர் அலுவலகம் மற்றும் கம்ப்யூட்டர் ஆய்வகம் ஆகியவற்றின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே தீ வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவலறிந்த முதல்வர் சத்யா, கல்லுாரிக்கு வந்து, துவாக்குடி போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார்.