உள்ளடக்கத்திற்கு செல்ல

பட்டாசு விபத்து பலி: ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சீமான் கோரிக்கை
பட்டாசு விபத்து பலி: ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க சீமான் கோரிக்கை
ADDED : ஏப் 21, 2026 07:03 AM

அ நிறம் | அளவு
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
விபத்து எனும் போர்வைக்குள், அரசும், அதிகாரிகளும் ஒளிந்து கொள்கின்றனர். விதிமீறலும், பாதுகாப்பின்மையும் தான் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைகிறது.
இவை இனியும் தொடராமல் இருக்க, பட்டாசு ஆலைகளை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு, மாற்று தொழில் உருவாக்கி, அவர்களின் மறுவாழ்விற்கு அரசு உதவ வேண்டும்.
இந்த விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, தலா 50 லட்சம் ரூபாய், படுகாயமடைந்தவர்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
