ADDED : ஜூலை 26, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த பெண், சிகிச்சை பலனி ன்றி நேற்று உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் ஸ்ரீ மாரியம்மன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில், 21ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனி கார்த்திகை செல்வன், 25, லட்சுமி, 45, சங்கீதா, 43, ஆகியோர் பலியாகினர். டி.மாரியம்மாள், 50, நாகலட்சுமி, 55, எம். மாரியம்மாள், 53, ஆகியோர் தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதில், டி.மாரியம்மாள், நேற்று பலியானார். இவர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த கார்த்திகை செல்வனின் தாய். இதனால் பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.