உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 29, 2026 06:29 AM

அ நிறம் | அளவு
சென்னை : தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட அறிக்கை: தீபாவளியை முன்னிட்டு, 'ஆன்லைன்' பட்டாசு விற்பனையில் நடக்கும் மோசடிகளில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறைந்த விலை, சிறப்பு சலுகைகள் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில், முன் கூட்டியே பணம் செலுத்தி, ஏமாற வேண்டாம்.
சந்தேகத்திற்கு இடமான இணையதளங்கள், அழைப்புகள் மற்றும் இணைப்புகளை தவிர்த்து, பாதுகாப்பான முறையில் பொருட்களை வாங்குங்கள். சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டால், உடனடியாக '1930' என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
