தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அணுசக்தியை அடிப்படையாக வைத்து முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம்

 அணுசக்தியை அடிப்படையாக வைத்து முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம்

 அணுசக்தியை அடிப்படையாக வைத்து முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம்


ADDED : ஜூன் 27, 2026 12:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2026 12:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அணுசக்தி வாயிலாக, தாமிரம் - குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை, அடிப்படையாக வைத்து, உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தை, சென்னை அடுத்த கல்பாக்கத்தில், அணுசக்தி துறை தொடங்கியுள்ளது.

இந்தியாவின் துாய்மையான எரிசக்தி மற்றும் மேம்பட்ட அணு தொழில்நுட்ப திட்டத்தின் ஒரு சாதனையாக, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் உள்ள, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், அதிவேக சோதனை ஈனுலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து உருவாகும், வெப்பத்தை பயன்படுத்தி, தாமிரம் - குளோரின் வெப்ப வேதியியல் சுழற்சியை அடிப்படையாக வைத்து, உலகின் முதலாவது ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் ஸ்ரீகுமார் ஜி.பிள்ளை முன்னிலையில், அணுசக்தி துறை செயலர் அஜித் குமார் மொஹந்தி நேற்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, பாபா அணு ஆரய்ச்சி மையம் சார்பில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, தாமிரம் - குளோரின் வெப்ப வேதியியல் நடைமுறையின் வாயிலாக, அணுசக்தியை பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தியை உறுதி செய்ய, ஒரு தொழில்நுட்ப செயல் விளக்க மையமாக, இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

அணு பதன வெப்பத்தை, ஹைட்ரஜன் உற்பத்தியுடன், வெற்றிகரமாக ஒருங்கிணைத்திருப்பது, முன்னோடி தொழில்நுட்ப முன்னேற்றத்தை குறிக்கிறது. மேம்பட்ட அணு உலைகளை பயன்படுத்தி, பெருமளவில் கார்பன் இல்லாத, ஹைட்ரஜன் உற்பத்திக்கு வழிகாட்டுகிறது. இந்த ஆலை, அணுசக்தி உதவியுடன், ஹைட்ரஜன் உற்பத்தி தொழில்நுட்பங்களை, வணிக ரீதியாக பயன்படுத்தவும், எதிர்கால ஆராய்ச்சிகளு க்கும் உதவும்.

வேக அணு உலைகளில் இருந்து கிடைக்கும், அணுக்கரு வெப்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக, நிலக்கரி உள்ளிட்ட புதைபடிம எரிபொருட்களை சார்ந்திருப்பதை கணிசமாக குறைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us