சூறாவளியால் மூழ்கியது படகு கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு
சூறாவளியால் மூழ்கியது படகு கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு
ADDED : டிச 16, 2024 07:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: கடந்த 14ல், ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் மணிவண்ணன் என்பவரது விசைப்படகு, 3 கடல் மைல் அல்லது 5 கி.மீ., சென்ற போது, சூறாவளி வீசியதால் கடல் கொந்தளிப்பில் ராட்சத அலைகள் எழுந்தன. இதில் இப்படகின் அடிப்பகுதியில் மரப்பலகை உடைந்து, கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்க துவங்கியது.
அதில் பயணித்த மீனவர்கள் ஆறுமுகம், 45, குமார், 50, உள்ளிட்ட ஏழு பேர் தத்தளித்த படி இருந்தனர்.
அவர்களை பார்த்த, அவ்வழியாக மீன்பிடித்த மற்றொரு படகின் மீனவர்கள், உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்டு ராமேஸ்வரம் கரைக்கு அழைத்து வந்தனர்.
கடலில் மூழ்கிய படகை மீட்க, ஓரிரு நாட்களில், ளில் மீன்வளத்துறை அனுமதியுடன், மீட்பு படகில் மீனவர்கள் செல்ல உள்ளனர்.