ADDED : பிப் 16, 2024 11:22 PM
சென்னை:'தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படும் சிறந்த நுாலுக்கான பரிசுக்கு, ஐந்து நுால்கள் அனுப்பினால் போதும்' என, தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழில் சிறந்த நுால்களை எழுதவும் பதிப்பிக்கவும், எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், சிறந்த நுால் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதில், 33 தலைப்புகளில் வெளியிடப்படும் நுால்கள் தேர்வு செய்யப்பட்டு, நுாலாசிரியருக்கு 30,000 ரூபாயும், பதிப்பகத்தாருக்கு 10,000 ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது.
இதற்கு, 10 நுால் பிரதிகளை தமிழ் வளர்ச்சி துறையிடம் வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
அதிக விலையுள்ள நுால்களை பதிப்பித்த பதிப்பகங்கள், இந்த தேர்வுக்கு நுால்களை அனுப்புவதில்லை. இதுகுறித்து, கடந்த மே 18ல், நம் நாளிதழில் செய்தி வெளிடப்பட்டது.
இதையடுத்து, 'சிறந்த நுால் பரிசுக்கு இந்தாண்டு முதல் ஐந்து பிரதிகளை அனுப்பினால் போதும்' என, தமிழ் வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.