ADDED : மார் 07, 2026 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில், பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம் நிகழ்வு, நேற்று நடந்தது.
திருவாரூர் தியாகராஜர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில், ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர பெருவிழா, மார்ச் 4ம் தேதி துவங்கியது. முதல் நாளில் விநாயகர் வழிபாடு, காப்புக்கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, நெல் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளைத் துணியில், ரிஷப உருவம் பொறித்த கொடிக்கு வழிபாடு நடந்தது.
இதையடுத்து, நேற்று காலை, 9:20 மணிக்கு, வேதபாராயண முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மார்ச் 29ம் தேதி, ஆழித்தேரோட்டம் நடக்க உள்ளது.

