ADDED : ஆக 03, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, மூவர்ண கொடி யாத்திரை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, தமிழக பா.ஜ.,வில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ., சார்பில், ஒவ்வொரு ஆண்டையும் போல, வரும் சுதந்திர தினத்தையும் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் படி, மூவர்ண கொடி யாத்திரை, வீடுதோறும் தேசிய கொடி ஏற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், வரும் 10ம் தேதி முதல் நடக்க உள்ளன. இந்த பணிகளை ஒருங்கிணைக்க, மூவர் அடங்கிய ஒரு குழுவை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நா கேந்திரன் நியமித்துள்ளார்.