ADDED : மார் 25, 2025 05:51 AM

சென்னை; தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒருமாத சம்பளத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, நேற்று முதல்வரிடம் வழங்கினர்.
தமிழக சட்டசபையில் காங்., கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், தங்களின் ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வழங்கினர்.
கடந்த ஆண்டு பெஞ்சல் புயலில் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, நிவாரண உதவி வழங்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கினர். அதைப்போல, தற்போது காங்., -எம்.எல்.ஏ.,க்களும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்கி உள்ளனர். மிகவும் கால தாமதமாக வழங்கி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.