வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
வெள்ள நிவாரணம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு
ADDED : ஏப் 03, 2024 09:00 AM

புதுடில்லி: சென்னை, தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வேலூரில் நேற்று (ஏப்.,2) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக கூறியிருந்தார்.
அதன்படி, இன்று மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2000 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே, நிவாரணம் கோரி பிரதமருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

