ADDED : ஜன 10, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வைகை அணைக்கு 5,244 கன அடி நீர் வந்துகொண்டுள்ளது.
இந்த நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

