ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்க: தென்னரசு
ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்துங்க: தென்னரசு
ADDED : மே 11, 2026 06:55 AM

காரியாபட்டி: ''நிதி இல்லை என காரணம் தேடாமல் ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தில் புதிய அரசு கவனம் செலுத்த வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு, முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுரை கூறினார்.
அவரது அறிக்கை: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பெரும் நிதி நெருக்கடிகளையும் பேரிடர்களையும் திறம்பட கையாண்டு, தமிழகத்தின் பொருளாதாரத்தை இரட்டை இலக்க வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர். அதை சான்றாக கொண்டு, மாநிலத்தின் கடன் அளவு, அனுமதிக்கப்பட்ட உச்சவரம்பிற்கு உள்ளேயே இருப்பதை உணர வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி இருப்பதை போல, 'நிதி இல்லை' என்பன போன்ற காரணங்களை தேடாமல், ஆக்கப்பூர்வமான நிர்வாகத்தில் புதிய அரசு கவனம் செலுத்தி, தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே சரியாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
