ADDED : பிப் 03, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; 'தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு, அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்து வருகிறது. இருப்பினும், இன்று முதல் பிப்ரவரி, 8 வரை பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலையே காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில், ஒரு சில இடங்களில், அதிகாலையில் லேசான பனி மூட்டம் காணப்படும். இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.