தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கால்பந்து: கோவா கலக்கல்

 கால்பந்து: கோவா கலக்கல்

 கால்பந்து: கோவா கலக்கல்


ADDED : ஏப் 24, 2026 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் கோவா அணி 2-0 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்திய சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. நேற்று, அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் கோவா அணியின் டிராசிக் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் 'ஸ்டாபேஜ்' நேரத்தில் (90+3வது நிமிடம்) கோவா அணியின் முகமது யாசிர் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய வடகிழக்கு யுனைடெட் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-0 என வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 10 போட்டியில், 5 வெற்றி, 4 'டிரா', ஒரு தோல்வி என, 19 புள்ளிகளுடன் கோவா அணி 2வது இடத்துக்கு முன்னேறியது. முதலிடத்தில் மோகன் பகான் அணி (20 புள்ளி) உள்ளது. ஐந்தாவது தோல்வியை பெற்ற வடகிழக்கு யுனைடெட் அணி (7 புள்ளி) 12வது இடத்தில் உள்ளது.

இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் பெங்களூரு - மும்பை (இடம்: பெங்களூரு), ஜாம்ஷெட்பூர் - சென்னை (இடம்: ஜாம்ஷெட்பூர்) அணிகள் மோதுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us