திண்டுக்கல்லில் ஜூன் 29, 30ல் கால்பந்து வீரர்கள் தேர்வு முகாம்
திண்டுக்கல்லில் ஜூன் 29, 30ல் கால்பந்து வீரர்கள் தேர்வு முகாம்
ADDED : ஜூன் 27, 2025 03:02 AM
திண்டுக்கல்:அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இணைந்து மாநில அளவிலான கால்பந்து வீரர்கள் தேர்வு முகாமை திண்டுக்கல்லில் ஜூன் 29, 30 ல் நடத்துகின்றனர்.
இந்தியாவில் இளம் கால்பந்து வீரர்களின் திறனை வளர்க்கும் நோக்கில் இரு அமைப்புகளும் இணைந்து பல கால்பந்து அகாடமிகளை உருவாக்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக வீரர்கள் தேர்வு நடக்க உள்ளது. ஆண்கள், பெண்களுக்கான தேர்வு முகாம்கள் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் ஜூன் 29, 30ல் நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் வீரர்கள் அகாடமிகளில் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.
தமிழக கால்பந்து சங்க தலைவர் சண்முகம் கூறியதாவது: இந்த முயற்சி தமிழகத்தில் கால்பந்து வளர்ச்சிக்கான முன்னேற்றத்தைக் கொடுக்கும். பங்கேற்ற விரும்புவோர் https://forms.gle/bmpgPZuSchYcrqtv6 என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆண்களுக்கு ஜூன் 29, பெண்களுக்கு 30ல் தேர்வு முகாம் நடக்கிறது என்றார்.