மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வெளிநாட்டு பயணி 'வீடியோ' வெளியீடு
மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வெளிநாட்டு பயணி 'வீடியோ' வெளியீடு
ADDED : ஏப் 22, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டிலில் குறிப்பிட்ட விலையை விட, கூடுதல் பணம் வாங்குகின்றனர் என, வெளிநாட்டு யூ-டியூபர் வெளியிட்ட வீடியோவை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர் கோவை சத்யன், தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை வந்த வெளிநாட்டு யூ--டியூபர் ஒருவர், டாஸ்மாக் மதுக்கடையில் பீர் வாங்க செல்கிறார். அவரிடம் கடை ஊழியர், அதிகபட்ச விற்பனை விலையை விட, கூடுதலாக 20 ரூபாய் கேட்கும் காட்சியை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள கோவை சத்யன், 'சட்டசபையில் மதுவிலக்குத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. ஆனால், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகம் வாங்கும் கொள்ளை நடக்கிறது' எனக், கூறியுள்ளார்.

