ADDED : ஆக 03, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஹாரில், வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொண்டது போல், தமிழகத்திலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இது, தமிழக வாக்காளர்களை பாதிக்கும். மேலும், தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநிலத்தவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உள்ளதாக தெரிகிறது. அப்படி, லட்சக்கணக்கானோரை சேர்த்தால், தமிழக அரசியல் தலைகீழாக மாறிப்போகும்.
எனவே, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தில், ஓட்டுரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு, முதல்வர் ஸ்டாலின் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையாக, சோதனை முறையில், தேர்தல் ஆணையம் இதை மேற்கொள்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
- திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்