sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்'

/

'500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்'

'500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்'

'500 கி.மீ.,க்கு சாலை வனத்துறை அமைக்கும்'

3


ADDED : ஏப் 02, 2025 04:07 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 04:07 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

பா.ம.க., - சிவகுமார்: விழுப்புரம் மாவட்டம் மயிலம் கிராமத்தில், வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: மயிலம் தொகுதியில், வன விலங்குகள் நடமாட்டம் மிகக்குறைவு. காட்டுப்பன்றிகள், குரங்குகள் மட்டுமே உள்ளன. எனவே, வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கும் திட்டம் இல்லை.

சிவகுமார்: மயிலம் தொகுதியில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில், மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்க வேண்டும். பகிங்ஹாம் கால்வாயில், கடுவேளி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

அமைச்சர்: பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில், ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிவகுமார்: செஞ்சி ஒன்றியம், ஆலம்பூண்டியில் இருந்து மழுவந்தாங்கல் செல்லும் சாலை, வனத்துறை வழியே 6 கி.மீ., செல்கிறது. இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலை அமைக்க வனத்துறை அனுமதிக்க வேண்டும். சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த 130 ஏக்கர் நிலத்தில், பசுமை பூங்கா அமைக்க வேண்டும்.

அமைச்சர்: வனத்துறை மூலமாக, 500 கி.மீ., நீளத்திற்கு, 250 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட உள்ளது. புதிய சாலை அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி பெற்று, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us