ADDED : மார் 15, 2024 09:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து காட்டுத்தீ சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா, ஏழு; கிருஷ்ணகிரியில், ஆறு; திருவண்ணாமலையில், நான்கு; தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா, இரண்டு என மொத்தம், 28 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வன ஆராய்ச்சி நிறுவன தகவல் அடிப்படையில், இப்பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

