உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 13, 2026 12:45 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் நேற்று, 32 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக, பல்வேறு இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், காட்டுத்தீ ஏற்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை, தமிழக வனத்துறைக்கு அனுப்பியுள்ளது.
அதில், நீலகிரி, 12; வேலுார், 9; திருவண்ணாமலை, 7; திருப்பத்துார், 3; கிருஷ்ணகிரி, 1 என மொத்தம், 32 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், அந்தந்த மாவட்ட கள பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு, காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
