ADDED : ஆக 29, 2011 12:57 AM
பழநி : வனத்துறைக்கான புதிய நில எல்லை வரைபடம் தயாரிக்கும் பணி, ஜி.பி.எஸ்., கருவி மூலம் நடக்கிறது.
வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பால் வன விலங்குகளை வேட்டையாடுதல் குறைந்துள்ளது. இருந்த போதிலும், உணவு, தண்ணீர் தேவைக்காக, வனவிலங்குகள் எல்லையை தாண்டி வருவதால், அவற்றை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லை விரிவாக்கத்தில், ஆக்கிரமிப்பு வனப்பகுதிகள் மீட்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளுக்கு கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்கும் வகையில், தற்போதைய நில எல்லை அமைப்புப்படி, வரைபடம் தயாரிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வனத்துறையின் மொத்த நிலப்பரப்பு அதிகரித்தபோதும், பழைய வரைபடமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனால், தற்போதைய நில அமைப்பின்படி, வன எல்லை குறித்த புதிய வரைபடம் தயாரிக்கும் பணிகள், ஜி.பி.எஸ்., கருவி உதவியுடன் துவங்கியுள்ளன, என்றார்.