அ.தி.மு.க., 'மாஜி ' எம்.எல்.ஏ.. மாரடைப்பால் உயிரிழப்பு
அ.தி.மு.க., 'மாஜி ' எம்.எல்.ஏ.. மாரடைப்பால் உயிரிழப்பு
UPDATED : ஜூலை 16, 2025 09:45 AM
ADDED : ஜூலை 16, 2025 07:19 AM
குளித்தலை : அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மாரடைப்பால் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் 1989, 1991 என இரண்டு முறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பிள்ளப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன், 72. இவர் மாரடைப்பு காரணமாக, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இவர் 1989ம் ஆண்டு சேவல் சின்னத்திலும், 1991ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க.,வில் உரிய மரியாதையும், பொறுப்பும் வழங்காததால் அதிலிருந்து விலகி, தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
பின்னர், அக்கட்சியிலும் இருந்து விலகி, கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தார்.
குளித்தலை, காவேரி நகர் அண்ணா திருமண மண்டபம் அருகில் உள்ள இவரது சொந்த வீட்டில், வசித்து வந்த நிலையில், மாரடைப்பால் இறந்தார்.
இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அறிவழகன் உடலுக்கு, அனைத்து கட்சி பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

