சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விடுதலை
சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விடுதலை
ADDED : பிப் 14, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோயில்: சொத்துக்குவிப்பு வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் விடுதலை செய்யப்பட்டார்.
1996 - 2001 ல் தி.மு.க., ஆட்சியில் சுற்றுலா அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் அ.தி.மு.க., ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சுரேஷ்ராஜனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

